Categories
உலக செய்திகள்

மீன்களின் வாழ்வை பாதிக்கும் இந்த தொட்டி…. தடை விதிக்கிறதா அரசு?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

பெல்ஜியம் அரசாங்கத்தின் விலங்குகள் நல அமைச்சர் பெர்னார்ட் கிளெர்பயட், “மீன்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் வட்ட வடிவிலான மீன் தொட்டிகள் அமைந்துள்ளது. பெரும்பாலும் செவ்வக அல்லது சதுர வடிவ மீன் தொட்டிகளை காட்டிலும் வட்டமான தொட்டிகள் சிறிய நீர் மேற்பரப்பையே கொண்டுள்ளது. இதனால் தண்ணீரில் உறிஞ்சப்படும் ஆக்சிஜனின் அளவு மிக மோசமாக பாதிக்கப்படுகிறது.

இந்த வட்ட வடிவிலான மீன் தொட்டிகள் மீன்களின் வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது. பிரஸ்ஸல்ஸ் தலைநகர் பகுதிக்கு மட்டுமே வட்ட வடிவிலான மீன் தொட்டிகளுக்கான தடை பொருந்தும். வட்ட தொட்டிகள் இனிவரும் காலங்களில் தடை செய்யப்படுமே தவிர மக்கள் அதனை பயன்படுத்தும் பட்சத்தில் அரசாங்கம் அதில் தலையிடாது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |