Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கரும்பு தராததால் ஆத்திரம்….. வியாபாரிக்கு கத்தி குத்து…. குடல் சரிந்த நிலையில் தீவிர சிகிச்சை….!!

விழுப்புரத்தில் கரும்பு கேட்டு கொடுக்காததால் வியாபரியை மர்ம ஆசாமி ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே கரும்பு கேட்டு கொடுக்காத ஆத்திரத்தில் வியாபாரியை கத்தியால் குத்திய போதை ஆசாமியை பொதுமக்கள் சரமாரியாக தாக்கி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். வசந்த கிருஷ்ணா புரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் ஆற்றுதிருவிழாவில் கரும்பு விற்பனை செய்து கொண்டிருந்தார்.

அப்போது  குடிபோதையில் அவரிடம் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் பணம் கொடுக்காமல் கரும்பு கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகாரரில் வியாபாரியை சக்திவேல் கத்தியால் குத்த குடல் சரிந்த நிலையில் ஜெயபிரகாஷ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |