Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! ஈடுபாடு அதிகரிக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..!
இன்று வாகன யோகம் உண்டாகும்.

சாஸ்திர ஆராய்ச்சியிலும் ஈடுபட அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மனதில் பட்டதை வெளிப்படுத்துவீர்கள். நேர்மையான எண்ணங்கள் இன்று பிரதிபலிக்கும். தனவரவு அதிகப்படியாக இருப்பதால் சேமிக்கக்கூடிய எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று வெளியூர் பயணங்களில் நல்ல முன்னேற்றமான சாதகமான சூழல் இருக்கும். பயணங்கள் உங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். உடல்நலக்குறைவு அனைத்தும் சரியாகும். அக்கம்பக்கத்தினரை அனுசரித்துச் செல்லவேண்டும். தேவையில்லாத வாக்கு வாதங்கள் வேண்டாம்.

அனைவரிடமும் பொறுமையாகவும் விட்டுக்கொடுத்துச் சென்றால் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெளிர் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள் இன்றையநாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |