பெங்களூர் மெட்ரோ ரயிலில் அளவிலா பயண சலுகை வழங்கும் திட்டம் அறிமுகமாகியுள்ளது.
மிக விரைவான மிகவும் எளிதான பயணத்தை ஏற்படுத்தி தரும் பெங்களூர் மெட்ரோ ரயில் தற்போது மூன்று நாட்களுக்கு என அளவிலான பயண சலுகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஏப்ரல் 2 ஆம் தேதியான நாளை முதல் இந்த சலுகை திட்டம் தொடங்க உள்ளது. ஒருநாள் மற்றும் மூன்று நாள்கள் என அதனை பெற்றுக்கொள்ள முடியும். ஒரு நாளைக்கு ரூபாய் 200 பாஸ் அல்லது மூன்று நாட்களுக்கு ரூபாய் 400 பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
இதில் திரும்ப செலுத்தத்தக்க ரூபாய் 50 வைப்பு தொகையில் அடங்கும். அந்த குறிப்பிட்ட நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் அந்த ரயிலில் பயணம் செய்ய முடியும். இந்த பாஸ்கள் ரயில் நிலைய டிக்கெட் வழங்கும் மையங்களில் கிடைக்கும். இந்த ரயில் நிலையத்தில் ஒப்படைத்து ரூபாய் 50 பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் அந்த பாஸ் முழுமையாக செயல்படும் வகையில் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.