Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்டில் மின் கட்டணம் உயர்வு…. ஒழுங்குமுறை ஆணையம் முடிவு….!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையமானது புதிய மின் கட்டணத்தை இன்று அதிகரித்து அறிவித்துள்ளது. அதன்படி உத்தரகாண்ட் மாநிலத்தில் மின்கட்டணம் 2.67 சதவீதம் உயர்ந்துள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள ரூ.4 லட்சம் BPL மற்றும் snowbound நுகர்வோருக்கு மின்கட்டணம் யூனிட்டிற்கு 4 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு மின் கட்டணம் 10 முதல் 30 பைசா வரை அதிகரித்துள்ளது. மேலும் NEFT/ RTGS/IMPS ஆன்லைன் மூலமாக பணம் செலுத்துவோருக்கு முன்பு இருந்த 0.75 சதவீதத்திலிருந்து 1. 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று மின்சார ஆணையம் கூறியுள்ளது.

அதன்படி 0 முதல் 101 யூனிட்டுகளுக்கு ரூபாய் 2.90 பைசாவும், 101 முதல் 200 யூனிட்டுக்கு 4.20 பைசாவும்.  200 முதல் 400 யூனிட்டுக்கு 5.80 பைசாவும், 400க்கு மேல் 6.55 பைசாவும் என வீட்டு உபயோக கட்டணங்கள் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக இந்த வகைகளுக்கு ரூபாய் 2.80, ரூபாய் 4.00, ரூபாய்  5.50 மற்றும் ரூபாய் 6.25 என்று மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது.

Categories

Tech |