துலாம் ராசி அன்பர்களே…! கோபத்தை விலக்கி அனைவரிடமும் பணிவுடன் நடக்க வேண்டும்.
எதற்கும் நீங்கள் வாய்திறக்காமல் இருப்பது நல்லது.வாய் துடுக்கான பேச்சை கொஞ்சம் குறைத்துக் கொள்ளப் பாருங்கள். நிதி நிலைமையை கையாளும் பொழுது கவனம் வேண்டும். அவசரத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்க வேண்டாம்.தீவிரமாக ஆலோசனை செய்து பின்னர் முடிவு எடுக்க வேண்டும். சந்திராஷ்டமம் தினம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கை வேண்டும். உடன் இருப்பவர்களிடம் அன்பாக நடக்க வேண்டும். எந்த ஒரு வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பிள்ளைகள் மீது கோபம் காட்ட வேண்டாம்.நீங்கள் உண்டு வேலை உண்டு என்று இருப்பது ரொம்ப நல்லது. வாழ்க்கையில் சில தடைகள் இருக்கும்.தடைகளை உடைத்தெறிந்து வெற்றி கொள்ள வேண்டியிருக்கும். பொறுமையாக இருக்க வேண்டும் முன்கோபம் பட வேண்டாம். உடல்நிலையில் சின்னசின்ன பாதிப்பு இருக்கும். பெரிய கெடுதல் எதுவும் இல்லை. உணவு விஷயத்தில் ரொம்ப ரொம்ப கட்டுப்பாடு வேண்டும். என்னை உணவுகளை முற்றிலும் தவிர்க்க பாருங்கள். காரமான உணவு வகைகளை தொடவேண்டாம்.
மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் கூடும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது கரும் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் கருநீலம் நிறம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சனிக்கிழமை என்பதால் எழுந்து கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் வைத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு.
அதிஷ்ட எண் 3 மற்றும் 5.
அதிர்ஷ்டநிறம் கருநீலம் மட்டும் மஞ்சள் நிறம்.