Categories
மாநில செய்திகள்

“பிரபல GAME SHOW” முதன்முதலில் ரூ1,00,00,000 வென்ற மாற்றுத்திறனாளி பெண்….!!

“கலர்ஸ் தமிழ்” தொலைக்காட்சியில் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் முதல்முறையாக மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் ரூபாய் ஒரு கோடி பரிசு வென்றுள்ளார்.

 பிரபல கலர்ஸ் தொலைக்காட்சி நடத்தும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில்பங்கேற்ற மதுரையைச் சேர்ந்த வாய் பேச முடியாத காது கேளாத பெண்ணான கௌசல்யா கார்த்திகா அதிர்வுகள் மற்றும் வாய் அசைவுகள் மூலமாக  கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அவருக்கு சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொலைக்காட்சி வர்த்தகப் பிரிவு தலைவர் சந்திரசேகரன் நிகழ்ச்சி தொகுப்பாளர் ராதிகா சரத்குமார் ஆகியோர் ரூ 1 கோடிக்கான பரிசுத் தொகைக்கான காசோலையை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் ரூ 1 கோடியை முதன்முதலில் வென்றது கௌசல்யா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |