Categories
உலக செய்திகள்

“அடிக்கு மேல அடி”…. வரலாறு காணாத வீழ்ச்சி…. பிரபல நாட்டு ரூபாயின் மதிப்பு சரிவு….!!

ஒரு டாலருக்கு இணையான பாகிஸ்தான் நாட்டின் ரூபாயின் மதிப்பு 183 ஆக சரிந்துள்ளது. 

பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்த சூழ்நிலையில் அரசியலில் பல நெருக்கடியை  சந்தித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு இணையான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பானது வரலாறு காணாத வீழ்ச்சியை தழுவியுள்ளது.

மேலும் ஒரு டாலருக்கு இணையாக பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 183 ஆக சரிந்துள்ளது. இதற்கு காரணம் சீனாவிடமிருந்து வாங்கிய கடனில் ஒரு பங்கை பாகிஸ்தான் திரும்ப செலுத்தியதால் அன்னிய செலவாணி இருப்பு குறைந்து பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு சரிந்து உள்ளதாக பாகிஸ்தான் ஸ்டேட் பாங்க் தெரிவித்துள்ளது.

Categories

Tech |