சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே தந்தையை கழுத்தறுத்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிபட்டியை சேர்ந்த பூபதி என்ற இளைஞன் தந்தை பழனிசாமி ,மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒன்றாக வாழ்ந்து வந்தார். இதற்கிடையே தனிக்குடித்தனம் செல்லும் படி தந்தை பழனிசாமி தொடர்ந்து வற்புறுத்தியதால், ஆறு மாதங்களுக்கு முன்பு பூபதி குடும்பத்துடன் தனிக்குடித்தனம் சென்றுள்ளார்.
அதன்பின்னர் சொத்தை பிரித்து தரக்கோரி பூபதி கூறியதால் தந்தை மகனுக்கு இடையே பிரச்சினை நீடித்து வந்தது. இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை பழனிச்சாமியை குடிபோதையில் இருந்த பூபதி கழுத்தை அறுத்து கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.