ஸ்ருதிஹாசன் தன் காதலரான சாந்தனுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை நெருக்கமான புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஸ்ருதி ஹாசன். இவர் சாந்தனும் என்பவரை காதலித்து வருகிறார். அவ்வபோது இவர்கள் இருவரும் சேர்ந்திருக்கும் போட்டோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். நேற்று சுருதிஹாசனின் காதலரான சாந்தனுக்கு பிறந்தநாள் என்பதால் அதற்கு ஸ்ருதி வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படங்களை பகிர்ந்து அதில் குறிப்பிட்டுள்ளதாவது, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்… என் காதலே… உலகம் உனது அற்புதமான ஆற்றலை சந்திக்க பாக்கியம் பெற்றுள்ளது… உன்னைப்பற்றி தினமும் அறிந்து கொள்வதற்கு நன்றி கூறுகிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் ஏஞ்சலே… நீங்களாக இருப்பதற்கு நன்றி, நீங்கள் செய்யும் அனைத்தையும் பார்க்க பார்த்திருக்க முடியாது! என அதில் ஸ்ருதி அவரின் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார். ஸ்ருதியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறுகின்றனர்.