Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு….. இன்று முதல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக மத்திய அரசு கல்யாண் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை தொடங்கியது. கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். அதனால் மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை அரசு வழங்கி வந்தது. அதன்படி இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

அதில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் கூடுதல் இலவச அரிசி விநியோகம் தமிழக ரேஷன் கடைகளில் இன்று முதல் தொடங்குகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள 93 முன்னுரிமை, 18 அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு கூடுதல் இலவச அரிசி வழங்கப்படுகிறது.

Categories

Tech |