Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… முதல்வரின் சூப்பர் அறிவிப்பு…!!!

டெல்லி பள்ளிகளைப் போலத் தமிழகத்திலும் நவீன வசதிகளுடன் பள்ளிகள் உருவாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

தமிழக பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகரான வசதியுடன் பள்ளிகள் இருக்க வேண்டுமென, பல்வேறு நலத் திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளிகளின் கட்டமைப்புகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர இலவச நோட்டு புத்தகங்கள், சைக்கிள், பேக், காலணி, சீருடை என அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகிறது.

இதனால் ஏராளமானோர் தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனையடுத்து மருத்துவ படிப்பிற்கான கூடுதல் இட ஒதுக்கீடானது அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக மற்றும் டெல்லி திமுக அலுவலக திறப்பு விழாவுக்காகவும்  டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அப்போது அங்கே பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் பலரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசியுள்ளார்.இதையடுத்து டெல்லி மெகல்லா கிளினிக் மற்றும் அரசுப் பள்ளிகளை அந்த மாநில முதல்வர் கெஜ்ரிவாலுடன் இணைந்து பார்வையிட்ட போது டெல்லி பள்ளிகளில் உள்ள நவீன வசதிகளை பற்றி முதல்வர்  மு.க.ஸ்டாலினுக்கு, அதிகாரிகள் விளக்கிக் கூறினார்கள்.

அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள பள்ளிகள் டெல்லியில் இருக்கும் மாதிரி பள்ளிகளை போல விரைவில் உருவாக்கப்படும் என்றும் அதே மாதிரியான பள்ளிகள் தமிழகத்திலும் உருவாக்கப்பட்ட பிறகு, அரவிந்த் கெஜ்ரிவாலை மக்களின் சார்பாக வரவேற்க இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

Categories

Tech |