இலங்கையில் ஏற்பட்டு வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் பால் மற்றும் பெட்ரோல் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அங்குள்ள மக்களுக்கு சாப்பாட்டிற்கு கூட வழியின்றி மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு அதிபர் மாளிகையை முற்றுகையிட்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் அமைச்சரவை கலைத்துவிட்டு காபந்து அரசாங்கத்தை அமல்படுத்த வேண்டும் என 11 கூட்டணிக் கட்சிகள் அதிபர் ராஜ்பக்சே வலியுறுத்தி இருக்கிறார்கள். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, இடதுசாரி ஜனநாயக முன்னணி உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளது.