Categories
மாநில செய்திகள்

“TNPSC GROUP-1” ஜனவரி 20 முதல் பிப்ரவரி 19 வரை…. அறிவிப்புடன் வெளியான விண்ணப்பம்…!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அதற்கான விண்ணப்ப பதிவு ஆன்லைனில் தொடங்கியது.

காவல்துறை துணை கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், வணிகவரித் துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டது. இதையடுத்து இந்த தேர்தளுக்கான விண்ணப்ப கால அவகாசம் இன்று முதல் பிப்ரவரி 19ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான முதல்நிலை எழுத்து தேர்வு ஏப்ரல் ஐந்தாம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விபரங்கள் டிஎன்பிஎஸ்சி இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. குரூப் 1 தேர்வில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |