Categories
தேசிய செய்திகள்

அடுத்த பரபரப்பு!… இஸ்லாமியர் கடையில் இறைச்சி வாங்க கூடாது…. இந்து அமைப்பினர் பிரசாரம்…..!!!!!

கர்நாடகா மாநிலம் பத்ராவதி பகுதியிலுள்ள இஸ்லாமியர்கள் மதத்தினர் கடைகளில் இந்துக்கள் யாரும் இறைச்சி வாங்கக் கூடாது என்று பஜ்ரங்தள் அமைப்பினர் துண்டுப் பிரசுரங்களை வீதி வீதியாகக் கொடுத்து பிரச்சாரம் மேற்கொண்டனர். மேலும் அப்போது இறைச்சி கடை வைத்திருந்த இஸ்லாமியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஷிவமோகா மாவட்டத்தில் உணவுக்கடை வைத்து இருந்த இஸ்லாமியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த 5 பேரை கைது செய்தனர். அத்துடன் பஜ்ரங்தள் அமைப்பின் இந்த பிரச்சாரத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சென்ற மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி இந்து கோவில் திருவிழாக்களின்போது இஸ்லாமியர்கள் கடை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

Categories

Tech |