நாடாளுமன்ற தோட்டத்தில் கஞ்சா செடிகள் முளைத்து இருந்தது குறித்து சரியான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நியூஸிலாந்து நாடாளுமன்றத்தின் ரோஜா தோட்டத்திற்கு நடுவே சில இடங்களில் கஞ்சா செடிகள் முளைத்திருந்ததால் சர்ச்சைகள் எழுந்துள்ளது. அது எப்படி அங்கு முளைத்தது என மக்களிடையே சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், இது குறித்த சரியான தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. நியூஸிலாந்து பாராளுமன்ற பகுதியே சுமார் ஒரு வாரமாக ஆக்கிரமித்திருந்த எதிர்ப்பாளர்கள் விட்டுச்சென்ற கஞ்சாவில் இருந்து விழுந்த விதைகள் மூலமாகத்தான் இந்த செடிகள் முளைத்து இருக்கும் என கூறப்படுகிறது.
இப்படி ஒரு சம்பவம் முதல்முறையாக நடைபெற்றுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் நாட்டின் தடுப்பூசி ஆணை மற்றும் கடுமையான covid-19 கட்டுப்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்குமாறு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் முற்றுகையிட்டு கூடாரங்கள் அமைத்து நாட்கணக்கில் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீசார் கைது செய்தனர். இதன்பின் போராட்டம் ஒரு காலத்தில் முடிவடைந்தது. மேலும் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் அங்கு கஞ்சா பயன்படுத்தியதாகவும் கலவரத்தின்போது நாடாளுமன்ற தோட்டத்தில் சிதறி கிடந்ததாகவும் பராமரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இது நாடாளுமன்ற வளாகத்தில் பயிரிடப்பட்ட முதல் கஞ்சாவாக இருக்கலாம் என ஒரு பாதுகாவலர் கூறியுள்ளார். இந்நிலையில் பாராளுமன்ற சபாநாயகர் உத்தரவின்படி இதுவரை முளைத்த அனைத்து கஞ்சா செடிகளும் களையெடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அங்கு விழுந்துள்ள விதைகள் இன்னும் பல வருடங்களுக்கு கூட முளைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.