Categories
மாநில செய்திகள்

சூப்பர் குட் நியூஸ்… இனிய இரவு நேர பஸ்களில் பாதுகாப்பிற்காக போலீஸ்… வெளியான புதிய அறிவிப்பு…!!!!

சென்னையில்  பெண்களின் பாதுகாப்பிற்காக இரவுநேர பஸ்களை போலீசார் பணியமர்த்தும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது.

சென்னையில் பெண்கள் பாதுகாப்பிற்காக இரவு நேரங்களில் போலீசார் பணியமர்த்தும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியபோது, சென்னையில் ஆங்காங்கே சில குற்ற  சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குற்றங்கள் 25 சதவீதம் குறைந்துள்ளது.

பள்ளி கல்லூரி வளாகங்கள் அமைந்திருக்கும் பகுதிகளை காவல்துறை கண்காணித்து வருகிறது. மேலும் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். போதை பொருட்களுக்கு எதிராக 240 மேலும் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு பள்ளி கல்லூரிகளிலும் போதைப் பொருட்களுக்கு எதிரான தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது, எனவும் பள்ளி கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் வழித்தடங்களில் குறிப்பிட்ட நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.

இதற்கிடையில் தேவைப்படும் பட்சத்தில் புறநகர் ரயில்களில் போலீசார் பாதுகாப்பிற்காக பயணிப்பது போல மாநகர பேருந்துகளில் இரவு நேரங்களில் போலீஸார் பயணிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |