சவுதி அரேபியாவில் நேற்று பிறை தென்பட்டதால் அமீரக பிறை பார்க்கும் கமிட்டி இன்றிலிருந்து ரமலான் மாதம் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
இஸ்லாமியர்கள் அனைவரும் புனித ரமலான் மாதத்தில் 30 நாட்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ள நோன்பு இருக்கிறார்கள். இந்நிலையில் சவுதி அரேபியாவில் நேற்று பிறை தென்பட்டதால் அமீரக பிறை பார்க்கும் கமிட்டி இன்றிலிருந்து ரமலான் மாதம் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
இது இஸ்லாமிய நாள்காட்டி பிறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்க அமீரகத்தில் ரமலான் மாதத்தை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் துறைகளில் வேலை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வளைகுடா நாடுகளும் இன்றிலிருந்து ரமலான் மாதம் தொடங்குவதாக அறிவித்துள்ளது.