கோவை மாவட்டம் கோவில்பாளையத்தில் உள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனியார் பயிற்சி மையத்தில் 5 மாதமாக தங்கி நீட்தேர்வுக்கு பயிற்சி எடுத்து வந்த வடவள்ளியை சேர்ந்த ஸ்வேதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வரும் நிலையில், மாணவியின் மரணம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.