வாகனம் மோதி மான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.வி மங்கலம் மகாராஜா பாலிடெக்னி கல்லூரி அருகே 2 வயதுடைய புள்ளிமான் ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் புள்ளிமானின் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் புள்ளிமானின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து அருகில் உள்ள காட்டுக்குள் புதைத்து வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.