சிம்ம ராசி அன்பர்களே…!!!! இன்று உங்களுடைய செயல்களில் நியாயத்தை பின்பற்றுவீர்கள். பலரும் உங்கள் மீது நல்ல எண்ணம் கொள்வார்கள். தொழிலில் வியாபார வளர்ச்சி ஏற்படும். சீரான முன்னேற்றம் இருக்கும். கூடுதலாக பண வரவு கிடைக்கும். ஊட்டச் சத்தான உணவுகளை உண்டு மகிழுங்கள். இன்று செல்வம் சேரும், வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மனதைரியம் கூடும், எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். பண வரவு ரொம்ப சிறப்பாக இருக்கும் . அந்நிய நபரிடம் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. உங்களைப் பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் கொஞ்சம் ஒதுங்கி விடுவது நல்லது. இன்று விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களின் ஆதரவு இருக்கும், ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீலம்