இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் மூளங்குழி பகுதியில் பிரவீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். அதன்பிறகு பேருந்தில் ஏறி வேலைக்கு சென்றுள்ளார்.
இவர் வேலை முடிந்து திரும்பி வரும் போது இருசக்கர வாகனத்தை காணவில்லை. அதன்பிறகு மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் பிரவீன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.