இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தவிப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் ரோஷன் ரணசிங்கே பதவி விலகியுள்ளார். மே 1 முதல் இலங்கை இணை அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ரோஷன் ரணசிங்கே அறிவித்துள்ளார். மாகாண சபைகள், உள்ளூராட்சி விவகாரங்கள் துறை பொறுப்பில் இருந்து விலகுவதாக அதிபரிடம் ரோஷன் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தவிப்பதும், உணவு பொருட்கள் எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் நிற்பது வேதனை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ரோஷன் ரணசிங்கே பதவி விலகுவது இலங்கை அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.