Categories
உலக செய்திகள்

ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கிராம மக்கள்…!! உக்ரைனில் நெகிழ்ச்சி சம்பவம்..!!

ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்ட உக்ரைன் கிராமங்களை மீட்ட உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு அந்த கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்ட உக்ரைன் Irpin நகரமும், Kyivக்கு அருகில் உள்ள Hostomel விமான தளமும் உக்ரைன் வீரர்களால் மீட்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் செர்னோபில் அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதியையும் உக்ரைன் வீரர்கள் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர்.

அதேபோல் ரஷ்ய வீரர்களால் கைப்பற்றப்பட்ட கிராமம் ஒன்றை உக்ரைன் வீரர்கள் மீட்டதைத்தொடர்ந்து அந்த கிராம மக்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் கிராம மக்கள் சாலையில் இருபுறமும் நின்று உக்ரைன் வீரர்களுக்கு வரிசையாக நின்று நன்றி கூறுகின்றனர்.

Categories

Tech |