Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன கல்யாணமா….!! ஒரு வேல இப்படி இருக்குமோ….? யாஷிகாவின் செயலால் குழப்பத்தில் ரசிகர்கள்….!!!

யாஷிகா ஆனந்த் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வெளியிட்டுள்ள தகவலால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் யாஷிகா. இவர் இருட்டுஅறையில்முரட்டுகுத்து என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவ.ர் இதை எடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது. எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவர் பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு தற்போது மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளார். தற்போது ஒரு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் அவர் சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருப்பவர்.

யாஷிகா

இந்நிலையில் அவருடைய திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “எனது திருமணத்திற்கு பெற்றோர்கள் சமதம் சொல்லிடாங்க. இது அரேஞ்ச் மேரேஜ். நமக்கு லவ் எல்லாம் செட் ஆகாது. திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிப்பேன் “என்றார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தாலும், இது ஏப்ரல் 1ஆம் தேதி என்பதால் அவருடைய குறும்புத்தனமாக கூட இருக்கலாம் என்று தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

 

 

Categories

Tech |