Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தா பாணியை கையிலெடுத்த ஐஸ்வர்யா… கமென்டில் விலாசும் நெட்டிசன்கள்…!!!!

இந்திய சினிமா உலகில் பிரபல நடிகராக திகழும்  ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. விவாகரத்து அறிவிப்புக்கு பின் ஐஸ்வர்யா  மியூசிக் ஆல்பம் இயக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார்.

இதற்காக ஐதராபாத்தில் தங்கி பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யாவின் அண்மையில் பயணி ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் படம் இயக்க உள்ளதாக ஐஸ்வர்யா அறிவித்துள்ளார். இந்த சூழலில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா பல பதிவுகளை பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் கடந்த சில நாட்களாக ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் படங்களை பதிவிட்டு வருகிறார். அவரின் இந்த மாற்றத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தாலும், நெட்டிசன்கள் சிலர் விமர்சனம் செய்து வருகின்றார்கள்.

நடிகை சமந்தாவும் விவாகரத்து அறிவிப்புக்கு பின் கவர்ச்சிக்கு தாவியுள்ளார். புஷ்பா படத்தில் பாடல் ஒன்றுக்கு கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார். அவரை போல தற்போது ஐஸ்வர்யாவும் ஒர்க்கவுட் போட்டோவை பகிர்ந்து வருவதாக நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். ஆனாலும் இது அவங்க தனிப்பட்ட உரிமை. இதுல கருத்து சொல்ல மற்றவர்களுக்கு உரிமை இல்லை என ஒரு சிலர்  அவருக்கு ஆதரவாக கமெண்ட் செய்துள்ளனர்.

Categories

Tech |