ரஸலின் அதிரடியான ஆட்டத்தின் காரணமாக கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் 15வது சீசன் நேற்று நடந்ததில் கொல்கத்தா அணியும் பஞ்சாப் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. பஞ்சாப் அணி முதலில் களமிறங்கி தொடக்கத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்தது. இதில் அதிகபட்சமாக பானுக ராஜபக்ஷ 31(9), ககிசோ ரபாடா 25(16) எடுத்தனர். மற்ற வீரர்களும் குறைந்த ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட் செய்த கொல்கத்தா சற்று தடுமாறி பவர் பிளேயிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாபின் பக்கம் ஆட்டம் திரும்பியது.
அப்போது களமிறங்கிய ஆண்ட்ரோ ரஸல் பந்துகளை விளாசினார். தொடர்ந்து விளையாடிய ரஸல் 12-வது ஓவரில் 4 சிக்சர்கள் அடித்து ரன்களை குவித்தார். அதிரடியாக விளையாடிய ரஸல் 31 பந்துகளில் 8 சிக்சர்கள் 2 பவுண்டரி என 70 ரன்களை குவித்து அதிரடியாக விளையாடி 14.3 ஓவரிலேயே கொல்கத்தா அணி வெற்றிபெற்றது. இதைத்தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி அளித்த போது பஞ்சாப் அணி தொடக்கத்தில் விளையாடிய வேகத்தை பார்த்து உண்மையில் நான் அதிர்ச்சியடைந்தேன். அவர்கள் விளையாடியதை பார்த்தபின் பந்தை சரியான நேரத்தில் அடித்தால் என்னால் பவுண்டரிக்கு விரட்ட முடியும் என்ற நம்பிக்கையோடு விளையாடினேன். மேலும் ரஸல் அதிரடியாக விளையாடும் போது எனக்கு பெரும் நிம்மதி தான் வந்தது. அவர் உண்மையில் “ரஸல் மஸல்” தான் என பாராட்டியுள்ளார்.