Categories
தேசிய செய்திகள்

தெலுங்கு வருட பிறப்பு…!! கோலாகலமாக தயாராகியுள்ள திருமலை திருப்பதி…!!

தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் இன்று ஆழ்வார் திருமஞ்சன சேவை நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து கோயில் முழுவதும் வாசனை திரவியம் தெளிக்கப்பட்டு பிரகாரம் முழுவதும் பல வண்ண மலர்கள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட உள்ளது. அதோடு கோவிலின் ராஜகோபுரம் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு நேரங்களில் ஜொலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கு வருடப் பிறப்பான இன்று அதிகாலை முதலே ஏழுமலையானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து சுப்ரபாதம் மற்றும் தோமாலை அர்ச்சனை உள்ளிட்ட சேவைகள் நடைபெற உள்ளன. அதுமட்டுமல்லாமல் இன்று வார இறுதி நாள் என்பதால் கூடுதலாக பத்தாயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளன.

Categories

Tech |