அனுமதி இல்லாமல் கேரளாவிற்கு கற்களை கடத்தி சென்ற லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் சோதனைச்சாவடியில் கனிமவளம், புவியியல் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கேரளா நோக்கி சென்ற ஒரு லாரியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அனுமதி இல்லாமல் கற்களை கேரளாவிற்கு கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அதிகாரிகள் லாரி மற்றும் அதன் ஓட்டுநரை ஆனைமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஓட்டுநர் கேரள மாநிலத்தை சேர்ந்த ஜிவல் என்பது தெரியவந்துள்ளது. அந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்ததோடு, கற்களுடன் அந்த லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.