விவசாயியை காரில் கடத்தி சென்று பணம் பறித்த 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலையில் விவசாயியான அப்துல் ஹக்கீம் என்பவர் வசித்துவருகிறார். இவரது தோட்டத்தில் ராசுகுட்டி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராசுகுட்டி தனது நண்பரான அஜய் பிரகாஷ், கவின் மற்றும் சூரிய ஆகியோருடன் இணைந்து அப்துலை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி அப்துல்லை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ராசுக்குட்டி தோட்டத்தில் தேங்காய் திருடி செல்லும் நபர்கள் யார் என்று தெரிந்துவிட்டது. இது தொடர்பான வீடியோ தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு அந்த வீடியோவை எனது வாட்சப் எண்ணிற்கு அனுப்பு என அப்துல் கூறியுள்ளார். ஆனால் தனது செல்போனில் இருந்து வீடியோவை அனுப்ப இயலவில்லை. எனவே நேரில் வந்து வீடியோவை பார்க்குமாறு ராசுகுட்டி தெரிவித்துள்ளார். இதனை நம்பி காந்தி ஆசிரமம் பகுதிக்கு ராசுகுட்டியை பார்ப்பதற்காக அப்துல் சென்றுள்ளார். அங்கு ராசுகுட்டி தனது நண்பர்களுடன் இணைந்து அப்துல் ஹக்கீமை கடத்தி சென்று 5 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மேலும் ஆன்லைன் மூலம் 19 ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டனர்.
இதனை போலிசிடம் சொன்னால் கொன்று விடுவோம் என மிரட்டி அப்துல் ஹக்கீமை மரப்பட்டை பகுதியில் இறக்கி விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து அப்துல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அம்பராம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ராசுக்குட்டி, கவின், சூர்யா, பிரகாஷ் ஆகிய 4 பேரையும் அதிரடியாக கைது செய்துள்ளனர்.