அழுகிய நிலையில் காட்டு யானை இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மோதூர் பெத்திகுட்டை காப்புக்காடு மூலையூர் சரக வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அழுகிய நிலையில் பெண் யார் காட்டு யானை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கால்நடை மருத்துவர் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அதன் பிறகு யானையின் உடல் பாகங்கள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் முடிவில் தான் யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும். மேலும் கல்லீரல் நோய் தாக்கி யானை இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்