அரசு பள்ளியில் திருடி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியரான கலைமணி என்பவர் கணினி இருந்த அறைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு 55 இன்ச் எல்.இ.டி டிவி, 2 புரஜெக்டர் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பீளமேடு புதுநகர் பகுதியில் வசிக்கும் கோவிந்தராஜ் என்பவர் குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாததாலும், குழந்தையின் மருத்துவ செலவிற்கு அதிக பணம் தேவைப்பட்டதாலும் பள்ளியில் நடந்த மருத்துவ முகாமிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த டிவி, கணினி ஆகியவற்றை கோவிந்தராஜ் நள்ளிரவு நேரத்தில் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கோவிந்தராஜ காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.