Categories
தேசிய செய்திகள்

மாநில அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…. 3% அகவிலைப்படி உயர்வு…. அதிரடி காட்டிய அரசு…..!!!!!

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகையை 3 சதவீதம் உயர்த்தி 34 சதவீதமாக அரசாங்கம் அண்மையில் அறிவித்தது. இதன் காரணமாக லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனிடையில் பல மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொகையை உயர்த்துவதாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான ராஜஸ்தான் மாநில அரசும் தன் ஊழியர்களுக்கு 34 சதவீதம் அகவிலைப்படியை வழங்குவதாக அறிவித்தது.

இது குறித்து ராஜஸ்தானின் முதலமைச்சர் அசோக் கெலாட் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ராஜஸ்தான் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 34 % அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் வழங்கப்படும். இவை ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும் என்று குறிப்பிட்டார். இதற்கு முன்பாக ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையாக சென்ற 2021 ஆம் வருடத்தில் அகவிலைப்படி தொகை 28 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து மீண்டும் 3 % உயர்வுடன் 34 சதவீதம் அகவிலைப்படி தொகை உயர்வை ராஜஸ்தான் மாநில அரசு தற்போது அறிவித்து உள்ளது. இந்த நடவடிக்கையால் பல ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நேற்று (ஏப்ரல்.1) முதல் புதிய நிதியாண்டு தொடங்கி உள்ள நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தை தொடர்ந்து மற்ற மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Categories

Tech |