தனுஷ் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தியைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழும்படி கூறியும் இவர்கள் எதுவும் கேட்கவில்லை.
இருவரும் அவர்களின் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தனுஷ் தனது அப்பா, அம்மா, அண்ணன் செல்வராகவனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமானது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் குடும்பத்துடன் இருப்பதை பார்த்த ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கின்றார்கள்.