சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பனங்காடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் கார்த்திக் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக்கை கைது செய்ததோடு, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.