Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன்” பெண்ணிடம் 27 1/2 லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

நூதன முறையில் பெண்ணிடம் இருந்து பல லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புள்ள ஓசூர் சின்ன எலசகிரியில் 37 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். இந்நிலையில் மறுமணம் செய்வதற்காக பிரபல இணையதள திருமண தகவல் மையத்தில் அந்த பெண் தனது விவரங்களை பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ஸ்காட்லாந்து நாட்டிலிருந்து மார்கஸ் பக்சி என்பவர் இளம் பெண்ணிடம் செல்போனில் பேசி தான் கண் டாக்டராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் உங்களை திருமணம் செய்துகொள்ள விருப்பம் இருப்பதாக அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். அதன்பிறகு இருவரும் வாட்ஸ்அப் மூலம் பேசி வந்துள்ளனர். இதனை அடுத்து மார்கஸ் பக்சி நான் உங்களுக்கு 80 ஆயிரம் டாலரை ஒரு கிப்ட் பார்சலில் அனுப்பி வைத்துள்ளேன். சுங்க இலாகா அதிகாரிகளை சரிகட்டி அந்த டாலரை பெற்று கொள்ளலாம் என மார்கஸ் பக்சி தெரிவித்துள்ளார். மேலும் 7 வங்கி கணக்குகளை கூறி அதில் பணம் அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய அந்த பெண் 27 லட்சத்து 66 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். அதனை பெற்றுக்கொண்ட மார்கஸ் பக்சி பெண்ணுடன் பேசுவதை தவிர்த்துவிட்டார். மேலும் டாலர்களும் அந்த பெண்ணிற்கு வரவில்லை. அதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் கிருஷ்ணகிரி சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நூதன முறையில் பணத்தை பறித்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |