Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு வேலை வேண்டும்…. பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள்…. ஆட்சியரிடம் கொடுத்த மனு….!!

தற்காலிக செவிலியர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டதால் கலெக்டர் அலுவலகத்தில் அனைவரும் மனு  கொடுத்துள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் காலத்தின் போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தற்காலிக பணியில் 23 செவிலியர்கள் வேலை செய்து வந்துள்ளனர். அந்த 23 செவிலியர்களை மருத்துவமனை நிர்வாகம் நேற்று முன்தினம் பணி நீக்கம் செய்துள்ளது. இது தொடர்பாக நேற்று 23 செவிலியர்களும் கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் அவர்களுக்கு பணி வழங்கக்கோரி மனு கொடுத்துள்ளனர்.

அப்போது கோவிட்-19 மருத்துவ ஒப்பந்த பணியாளர்களின் நல சங்கத்தின் மாநில பொருளாளர் சாலமன் இதுபற்றி கூறியுள்ளதாவது, கொரோனா தடுப்பு காலத்தின் போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக எங்களை மருத்துவ நிர்வாகம் நிரந்தர பணி செய்யப்படுவதாக கூறி பணியில் அமர்த்தியது. ஆனால் இப்போது 23 செவிலியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. மேலும் மாநிலம் முழுவதுமாக 2,400 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் எங்களுக்கு ஊக்க தொகை,மற்றும் ஒரு மாதம் சம்பளம் ஆகியவை கிடைக்கவில்லை.

இந்நிலையில் நாங்கள் அனைவரும் எம்.ஆர்.பி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள்  தமிழகத்தில் புதிதாக 11 அரசு மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டு வருகின்ற நிலையில் எங்களுக்கு பணியில் அனுபவம் இருப்பதால் அதில் தங்களுக்கு வேலை கொடுக்கவேண்டும் இதற்காக முதலமைச்சரை சந்தித்து மனு அளிப்பதற்கு  முடிவு செய்திருக்கிறோம்”  என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |