Categories
சினிமா தமிழ் சினிமா

பாலியல் புகாரில் சிக்கிய சமந்தாவின் ‘ஊ சொல்றியா மாமா’ டான்ஸ் மாஸ்டர்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

ஊ சொல்றியா மாமா பாடல் நடன இயக்குனருக்கு மீது பாலியல் புகாரில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் புஷ்பா. அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தின் பாடலுக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்திருந்தார். என்னதான் அப்படி இப்படி விமர்சனங்கள் எழுந்தாலும் படம் என்னவோ செம ஹிட்டு கொடுத்தது. இந்த படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு படு கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டிருந்தார். ஊ சொல்றியா என தொடங்கும் அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இப்பாடளின் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா. தற்போது இவர் பாலியல் புகார் வழக்கில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பை போலீஸில் கணேஷ் ஆச்சார்யா மீது வழக்கு போடப்பட்டது. இந்த புகாரின் அவருடன் இணைந்து பணிபுரிந்த நடன இயக்குனருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுக்கு இயக்குனர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |