Categories
அரசியல்

தலைநகரில் வாக்கிங்….. மு.க.ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட இளைஞர்கள்….!!!!

முதல்வர் முக ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். முதல் நாளான மார்ச் 31ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி கோரிக்கை வைத்தார். நேற்று ஒன்றிய நிர்மலா சீதாராமன் சந்தித்து தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.  இந்நிலையில் இன்று மாலை டெல்லி – தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளார்.

முன்னதாக இன்று காலை டெல்லியில் முதல்வர் முக ஸ்டாலின் நடை பயிற்சி மேற்கொண்டபோது அங்கிருந்த இளைஞர்கள் பலரும் முதல்வர் முக ஸ்டாலின் உடன் செல்பி எடுத்துக்கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |