பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேகேப்பள்ளியில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகரத்னா என்ற மனைவி உள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு வீட்டில் சேலத்தை சேர்ந்த சசிக்குமார் என்பவர் குடியேறினார். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சசிக்குமார் வீட்டை காலி செய்து விட்டு வேறு ஒரு இடத்திற்கு சென்றுவிட்டார். இதனால் தான் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை பெற்று செல்வதற்காக முனிராஜின் வீட்டிற்கு சசிகுமார் சென்றுள்ளார்.
அப்போது சசிகுமாருக்கும், நாகரத்னாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபம்டைந்த சசிக்குமார் நாகரத்தினாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் காயமடைந்த பெண்ணை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சசிகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.