அதிபர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவ தளபதிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்துக்கும் மேலாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கிடையில் ரஷ்யா எளிதாக உக்ரைனை கைப்பற்றி விடலாம் என்று நினைத்த தப்பு கணக்கு போட்டு விட்டது. என்னெனில் ரஷ்யாவை உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் ராணுவ தளபதிகள் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை வட்டாரம் உளவுத்துறை தகவல் அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதில் “போரை நடத்துவதற்கு சில தளபதிகளே முன் வந்ததாகவும், இதனை தடுத்து இருக்கலாமோ என்று புதின் தற்போது சிந்திப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் உக்ரைனின் சண்டை நடக்கும் சமயத்தில் ரஷ்யாவிற்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.