Categories
உலக செய்திகள்

வெளியே போங்கடா….! உக்ரைன் அணுசக்தி மையத்தில் இருந்து வெளியேற்றபட்ட ரஷ்யா படையினர்…. வெளியான தகவல்….!!!

உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுசக்தி மையத்தில் இருந்து ரஷ்யா வீரர்கள் வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்திற்கு மேலாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய படையினரால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் செர்னோபில் அணு சக்தி மையத்திலிருந்து ரஷ்ய படையினரை வெளியேறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக உக்ரைன் அரசு எரிசக்தி நிறுவனமான எனர்கோடாம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை உக்ரைன் நாட்டில் அணுசக்தி மையத்திலிருந்து ரஷ்ய படையினர் வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து செயல்படாத நிலையிலும் அந்த அணுசக்தி மையத்தில் இருந்து மிக அதிகமான கதிர்வீச்சு அபாயம் இன்னும் இருக்கிறது. மேலும் ரஷ்ய வீரர்கள் இந்த மையத்தில் பதுங்குழி தோன்றியுள்ளனர். அப்போது அணுக்கதிர் வீச்சால் அவர்கள்  தாக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து  ஐ.நாவின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் பொது இயக்குனர் ரஃபேல் கிராஸ்ஸி கூறுகையில்,  “ரஷ்ய படையினர் அணுக்கதிர் விசால் தாக்கப்பட்ட தகவல் எதுவும் உறுதிப்படுத்த முடியவில்லை. இருப்பினும் அவர்கள் அணுசக்தி மையத்தின் கட்டுப்பாட்டை உக்ரைனிடம்  திரும்ப ஒப்படைத்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது” என்று கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பான ரஷ்ய அரசிடம் இருந்து தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.

Categories

Tech |