காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு அருகே காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு திற்பரப்பு நகர காங்கிரஸ் தலைவர் எட்வின் தலைமை தாங்கினார்.
இந்த போராட்டத்தில் திருவட்டார் மேற்குப் பகுதி காங்கிரஸ் தலைவர் காஸ்டஸ் கிளீட்டஸ், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், திற்பரப்பு பேரூராட்சி தலைவர் பொன் ரவி வார்டு கவுன்சிலர்கள் ஜெயக்குமார், ராஜப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.