தேசிய திறந்தநிலை பள்ளி கல்வி நிறுவனத்தின் (என்.ஐ.ஓ.எஸ்) பாடத் திட்டத்தின் கீழ் இயங்கும் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான சிறப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய திறந்த நிலை பள்ளி கல்வி நிறுவனமானது ஒரு தன்னாட்சி அதிகாரம் கொண்டது. இதில் திறந்தநிலை வகுப்புகளை சிறப்பு மாணவர்களுக்காக நடத்தி வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை தற்போது தொடங்கியுள்ளது.
அதிலும் குறிப்பாக கணிதம், அறிவியல், மொழி பாடங்கள் உட்பட குறிப்பிட்ட பாடத்தில் கற்றல் குறைபாடு உடையவர்களும், விளையாட்டு வீரர்கள், இடைநிலைக் கல்வியை தொடர முடியாமல் பாதியில் விட்டவர்கள் இதில் சேர்ந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு விரும்பிய பாடங்களை தேர்வு செய்யும் வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது. இது பற்றி மேலும் தகவல்களுக்கு 9094026669 மற்றும் 9840039599 என்ற எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.