நாடு முழுவதும் 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி லாரிகளுக்கான தகுதிச்சான்று பெறுவதற்கான கட்டணம் ரூ.13,500 மற்றும் பசுமை வழி ரூ.200 சேர்த்து ரூ.13,700, கார் உள்ளிட்ட வாகனங்களை ரூ.8,500, ஆட்டோக்களுக்கு ரூ.4,500 உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதியில் எப்சி சான்றிதழ் பெறாத வாகனங்களுக்கு நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.