Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“விசாரணைக்கு சென்ற ஏட்டையா” குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு….!!

விசாரணைக்கு சென்ற ஏட்டையா  மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கருங்குளம் கிராமத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலாயுதபட்டினம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அவரது உறவினருக்கும் இடையே நில  பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து விசாரிப்பதற்காக இருதரப்பினரையும் வரவழைக்கப்பட்டனர்.

அப்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு செந்தில்குமார் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மயங்கிய நிலையில் இருந்த செந்தில்குமாரை அருகில் இருந்த அதிகாரிகள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால்  அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |