Categories
உலக செய்திகள்

”இம்ரான் VS டிரம்ப் சந்திப்பு” காரணம் என்ன ? உற்றுநோக்கும் உலக நாடுகள் …!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை டாவோஸ் பொருளாதார மாநாட்டில் சந்திக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை டாவோஸ் பொருளாதார மாநாட்டில் சந்திக்கிறார். பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பொறுப்பேற்ற பின்னர், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை அவர் மூன்றாவது முறையாக சந்திக்கவுள்ளார்.

இதற்கு முன்னதாக கடந்தாண்டு ஜூலை மாதம் வாஷிங்டனில் அதிபர் ட்ரம்பை இம்ரான் கான் சந்தித்தார். அதன் பின்னர் செப்டம்பர் மாதத்தில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் இருவரும் சந்தித்துக்கொண்டனர். முன்னதாக இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் பிராந்தியத்தில் அச்சம் அளிப்பதாக இம்ரான் கான் கூறியிருந்தார்.

மேலும் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்தும் இந்தியாவுக்கு எதிராக கருத்தை பதிவு செய்தார். இம்ரான் கான் டாவோஸ் பொருளாதார மாநாட்டில் நாளை (21ஆம் தேதி) முதல் தொடங்கி 23ஆம் தேதிவரை மூன்று நாட்கள் கலந்துகொள்கிறார்.
அப்போது அவர் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்தித்து பேசவுள்ளார் என கூறப்படுகிறது.

Categories

Tech |