தனுஷ் புதிதாக இயக்கியிருக்கும் படத்திற்கு லதா ரஜினிகாந்த் குடைச்சல் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிந்து வாழப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். ஆனால் இவர்கள் இருவரின் முடிவிலும் இரு குடும்பத்தினருக்கும் சம்மதம் இல்லை என தெரிகிறது. இது பற்றி இருவரிடமும் குடும்பத்தினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். குடும்பத்தினரின் பேச்சு மற்றும் அப்பாவின் உடல்நிலையை கருத்தில்கொண்டு ஐஸ்வர்யா தனுஷுடன் மீண்டும் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆனால் தனுஷ் இனி சேர்ந்து வாழ்ந்தால் பிரச்சனை தான் வரும் என கூறி முரண்டு பிடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனுசை வழிக்குக் கொண்டுவருவதற்காக லதா ரஜினிகாந்த் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் தனுஷை வைத்து படம் பண்ண கூடாது என தனது செல்வாக்கை பயன்படுத்தி பேசி வருவதாக கூறப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றார்போல் ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்த பிறகு தனுஷிற்கு புதிதாக எந்த படங்களும் ஒப்பந்தமாகவில்லை.
இந்நிலையில் நடிகர் நாகர்ஜூனா வைத்து நான் ருத்ரன் எனும் படத்தை தனுஷ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த சூழலில் தனுஷ் இயக்கும் படத்தில் எந்த டெக்னீஷியன்கள் வேலை செய்யக்கூடாது என ரஜினியின் குடும்பத்தினர் உள்ளடி வேலையில் இறங்கியதாக கூறப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் பயங்கர கோபத்தில் இருப்பதாக தெரிகிறது.
எந்த பக்கம் திரும்பினாலும் தனுஷ் ரஜினியின் குடும்பத்தினர் செக் வைத்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஐஸ்வர்யாவின் நடவடிக்கையால் தனுஷ் மிகவும் கடுப்பில் இருக்கிறார். இந்நிலையில் அவரது கேரியருக்கு வேட்டு வைக்கும் வகையில் திரும்பும் பக்கமெல்லாம் அவருக்கு ரஜினி குடும்பத்தினர் கண்ணிவெடி வைப்பது அவரது கோபத்தை இன்னும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.