குஜராத் மாநிலத்தில் மின்சார தட்டுப்பாட்டால் தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒருநாள் கட்டாய விடுமுறை அளித்து குஜராத் உர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. மாநிலத்தின் மொத்த மின் தேவையில் 500 மெகாவாட் பற்றாக்குறையை சமாளிக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மின்மிகை மாநிலமாக முன்னுதாரணமாக விளங்கிய குஜராத் மாநிலத்தில் தற்போது மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மற்ற மாநிலங்களும் விளைவை சந்திக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
Categories