ரசிகர்களுடன் ஜி.வி பிரகாஷ் எடுத்த செல்ஃபி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”செல்பி”. இந்த படத்தில் வர்ஷா பொல்லம்மா, கௌதம் வாசுதேவ் மேனன், சுப்பிரமணிய சிவா. வாகை சந்திரசேகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தை திரையரங்கில் தனது ரசிகர்களுடன் அமர்ந்து படக்குழுவினர் பார்த்தனர். அப்போது இடைவேளையில் ரசிகர்களுடன் ஜி.வி பிரகாஷ் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இந்த அழகிய புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.